nps tax benefits tamil

nps tax benefits tamil

NPS தேசிய ஓய்வூதிய திட்டம் National Pension Scheme Benefits Everything You Need to Know About NPS


 • National Pension Scheme என்பது இந்திய அரசாங்கத்தின் "ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் "(Pension Fund Regulatory and Development Authority) கீழ் நடத்தப்படும் ஒரு பென்ஷன் திட்டம் ஆகும். 

 • இது  PPF and EPF போன்று ஒரு EEE (Exempt-Exempt-Exempt) அமைப்பு ஆகும். அதாவது, பென்ஷன் திட்டத்தின் முதிர்வு காலத்தில், முதலீடு செய்த மொத்த தொகைக்கும் மற்றும் withdraw செய்யப்படும்  மொத்த தொகைக்கும் வரி விலக்கு உண்டு. 

 • ஆரம்ப காலத்தில் NPS திட்டமானது அரசு ஊழியர்களுக்கு மட்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது.  ஆனால், 2009 ஆம் ஆண்டு முதல் Pension Fund Regulatory and Development Authority ஆனது  ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தியது.


யார் இந்த NPS திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்:

இந்திய குடிமகன் ஆனவர் இந்தியாவில் வசிப்பவர் அல்லது இந்திய குடியுரிமை இல்லாதவர் ஆகவும் இருக்கலாம்.ஆனால், பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

 • முதலீட்டாளரின் வயது ஆனது 18 முதல் 60 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
 • KYC விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
 • முதலீட்டாளருக்கு ஏற்கனவே NPS account இருக்க கூடாது. 


NPS திட்டத்தின் Tax Benefit:

NPS திட்டத்தில் முதலீடு செய்வதின் மூலம் பின்வரும் tax  benefit -களை பெறமுடியும்
 • பிரிவு 80C, 80CCC மற்றும் 80CCD(1) யில் ரூபாய் 1,50,000 வரை  tax பயன் கிடைக்கும். 
 • பிரிவு 80CCD(1B) மூலம் Rs 50,000 வரைக்கும் பயன் பெற முடியும். இது ஒரு "Over and above tax benefit" ஆகும்.

பணம் எடுப்பதற்கான விதிகள் 

 • முதலீடு செய்யப்பட்ட 100 percent தொகையில் , குறைந்தது 40 percent தொகையை NPS account -யில் வரவு வைக்க வேண்டும். இதன் மூலம் முதலீட்டாளருக்கு மாதம் தோறும் retirement ஆன பிறகு பென்ஷன் தொகை கிடைக்கும்.
 • மீதம் உள்ள 60 percent தொகையானது tax-free ஆகும்.இதனை முதலீட்டாளர் எளிதாக withdraw செய்ய முடியும். 


Post a Comment

Previous Post Next Post