White Paper Tamilnadu Finance | Palanivel Thiagarajan | தமிழக அரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை

White Paper Tamilnadu Finance | Palanivel Thiagarajan | தமிழக அரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை



White Paper on Tamilnadu Finance | Palanivel Thiagarajan | தமிழக அரசின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கை


இன்று தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் Palanivel Thiaga Rajan  தமிழ்நாட்டின் நிதி நிலைமை பற்றி வெள்ளை அறிக்கை (White Paper on Tamilnadu Finance  ) வெளியிட்டார்.

தற்போதைய நிதி பற்றாக்குறை ஆனது நீடித்து இருக்க சாத்தியம் (unsustainable) இல்லாதது ஆகும்.இதனை சரி செய்ய ஆழ்ந்த  சீர்திருத்தம் தேவை என்றும் அப்படியே தொடர முடியாது என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் உண்மை நிதி நிலைமையை ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நிதி அமைச்சர் Palanivel Thiaga Rajan   தெரிவித்தார்.

மாநிலத்தின் இந்த மோசமான நிதி நிலைக்கு முன்னர் ஆட்சியில் இருந்த அதிமுக அரசின் தவறான அரசியல் மற்றும் நிர்வாக முறையே காரணம் என்றும் தெரிவித்தார்.

 

தமிழ்நாட்டின் தற்போதைய நிதிநிலை(Fiscal Report) அறிக்கை பின்வருமாறு:

  • தமிழ்நாட்டின் கடன் ஆனது  வரும் மார்ச் 2022  வருடம் சுமார் ஐந்து லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கபட்டுள்ளது.இது ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் சுமார் Rs .70,0000 தொகை ஆகும்.
  • தமிழ்நாட்டில் 2013  - 2014  வருடம் முதல் நிதி வருவாய் பற்றாக்குறை உள்ளது.இது மிகவும் மோசமான நிதி வருவாய் பற்றாக்குறை ஆகும்.
  •  தற்போது தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் சுமார் 1.10 லட்சம் கடன் உள்ளது.
  • தமிழ்நாட்டின் நிதி பற்றாற்குறையில் வருவாய் பற்றாற்குறை 50 சதவிகிதத்திற்கு மேல் உள்ளது.
  • மார்ச் 31 ,2021 நிலவரப்படி, தமிழ்நாட்டின் மின்சாரம் மற்றும் போக்குவரத்துத் துறையில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் கோடி  கடன் உள்ளது.
  •  தமிழ்நாடு அரசு போக்குவரத்தில் ஒவ்வொரு கிலோமீட்டர்க்கும் ஆகக்கூடிய சராசரி செலவு ரூபாய் 96 ஆகும்.
  • மார்ச் 2021 நிலவரப்படி தமிழ்நாட்டின் நீர் வாரியங்களின் இழப்பு ஆனது சுமார் ஐந்தாயிரம் கோடி ஆகும்.
  • தமிழ்நாட்டின் மின்சார வாரியத்தின் (tangedco) ஒவ்வொரு யூனிட்டிருக்கும் இரண்டு ரூபாய் நஷ்டம் ஆகிறது.


மிகவும் கவனமான நடவடிக்கை மூலம் முந்தய அதிமுக ஆட்சியின் தவறுகளை சரி செய்திக்கு திமுகவின் அனைத்து தெரிதல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என நிதி அமைச்சர் Palanivel Thiaga Rajan தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post